சென்னையிலிருந்து நாடு திரும்பிய அனைவரையும் தனிமைப்படுத்தலுக்குச் செல்ல அறிவுறுத்தல்!

கடந்த 14 நாள்களில் இந்தியா சென்று நாடு திரும்பிய அனைவரையும் தனிமைப்படுத்தலுக்குச் செல்லுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜெயசிங்க கேட்டுகொண்டுள்ளார்.

இந்திய சென்று நாடு திரும்பிய இருவர் இன்று கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில் , இந்த வாரத்தில் நால்வர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இத்ன் காரணமாக கடந்த 14 நாள்களில் சென்னை சென்று திரும்பிய அனைவரையும் அருகிலுள்ள பொதுச் சுகாதாரப் பரிசோதகர், சுகாதார மருத்துவ அதிகாரிக்கு அறிவித்து தனிமைப்படுத்தலுக்குச் செல்லுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜெயசிங்க அறிவுறுத்தியுள்ளார்.