தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நகரசபை உறுப்பினர் உள்ளிட்ட மூன்று பேர் கைது!

ஊரடங்கு சட்டத்தினை மீறி பொது இடங்களில் நடமாடிய மூன்று பேரை கொடிகாமம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதன்போது பொலிஸாரின் அறிவுறுத்தலையும் உதாசீனம் செய்து வீதியில் பயணித்த சாவகச்சேரி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நகரசபை உறுப்பினர் உள்ளிட்ட மூன்று பேரும் அவர்கள் பயணித்த வாகனத்துடன் கைதாகியுள்ளனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட நகரசபை உறுப்பினர் உள்ளிட்டவர்கள் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் கொரோனா பரவலை தடுப்பதற்காக அரசாங்கம் ஊரடங்கு சட்டத்தை நாடு முழுவதும் அமுல்படுத்தியுள்ளது.

அத்துடன் இந்த நேரத்தில் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என பொலிஸாரால் அறிவுறுத்தப்பட்டும் அதனை உதாசீனம் செய்து வீதிகளில் பயணித்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.