அட்டுளுகம நபரின் தந்தை,சகோதரிக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது!

களுத்துறை – அட்டுளுகம பிரதேசத்தில் கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்ட நபரது தந்தை மற்றும் சகோதரிக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா அச்சம் காரணமாக நேற்று முதல் அட்டுளுகம பிரதேசம் முற்றாக மூடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்கத்தில் தற்போது கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நபரின் தந்தை மற்றும் சகோதரி இன்று நாகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் அவர்களிடம் இன்று நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுயாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.