கொரோனா முதல் மரணத்தால் பதறுகிறது இலங்கை!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபர்களில் ஒருவர் கொழும்பு ஐ.டி.எச் இல் இன்று உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் இலங்கையில் முதலாவது மரணம் இதுவாகும்.

60 வயதான உயிரிழந்த நபர் மாரவில பகுதியைச் சேர்ந்தவர் என்றும் அறியமுடிகின்றது.

குறித்த நபர் , நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தத்துக்கு உள்ளாகி, ஏற்கெனவே சிகிச்சை பெற்றுவந்தவர் எனவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் நாட்டுமக்கள், அரசாங்கம், பாதுகாப்பு தரப்பினர், சுகாதார பிரிவினர் மற்றும் ஏனைய அதிகாரிகளால் வழங்கப்படும் ஆலோசனைகளை பின்பற்றி, நடந்தால், கொரோனா வைரஸ் மேலும் பரவுவதை தடுக்கமுடியும் என அரசாங்க தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.