யாழ்ப்பாணத்தில் மதபோதகருக்கு கொரோனா ! 146ஆக அதிகரித்த எண்ணிக்கை

யாழ்ப்பாணத்தில் மற்றுமொருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள மத போதகர் ஒருவருக்கே இவ்வாறு கோரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கோரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் மேலும் 3 பேர் இன்று (ஏப்ரல் 1) புதன்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார மேம்பாட்டுத் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 146ஆக அதிகரித்துள்ளது.