அரசாங்கத்தின் உத்தரவை புறக்கணித்து பள்ளிவாசலில் ஒன்றுகூடிய மக்கள்!

ஊரடங்குச் சட்டம் மற்றும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாமல் இஸ்லாமிய பள்ளிவாசலில் மக்கள் ஒன்றுகூடியிருக்கின்றனர்.

இந்த சம்பவம் களுத்துறை – பேருவளை, குட்டிமலை பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்றிருக்கிறது.

இதன்போது அவர்களின் ஒன்றுகூடுதலை தடுக்கச் சென்ற பொதுசுகாதார அதிகாரிகளுக்கும் அவர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.