பொதுமக்களிடம் வங்கிகள் கடன் அறவிட்டால்.... இதனை செய்யுங்கள்

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட கடன்களுக்கான அறவீடுகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கான ஆலோசனையை இலங்கை மத்திய வங்கியின் பிரதி ஆளுநரான எச்.ஏ. கருணாரத்ன இன்று வழங்கியுள்ளார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிமிக்க தருணத்தில் வங்கியில், நிதி நிறுவனங்களில் இருந்து பெற்றுக்கொண்ட கடன்களுக்கான அறவீடுகளை வரும் 06 மாதங்களுக்கு தற்காலிகமாக நிறுத்துமாறு ஜனாதிபதியினால் அண்மையில் நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டது.

நிவாரணமாக இந்த அறிவிப்பு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் ஒருசில நிறுவனங்களால் கடன் அறவீடுகள் நடத்தப்பட்டதாக மக்கள் விசனம் வெளியிட்டிருந்தனர்.

இந்த நிலையில் இதுகுறித்து கருத்து வெளியிட்ட மத்திய வங்கியின் பிரதி ஆளுநர், எதிர்வரும் ஏப்ரல் 30ஆம் திகதிக்கு முன் சம்பந்தப்பட்ட நிதி நிறுவனம் அல்லது வங்கிக்குச் சென்று கடன் பெற்றவர்கள், இந்த நிவாரணம் குறித்து தெரியப்படுத்தி உறுதிசெய்துகொள்ள வேண்டியது அவசியம் என ஆலோசனை கூறியுள்ளார்