ரிஐடி, சிஐடி பணிப்பாளர்கள் உள்பட 11 பொலிஸ் அதிகாரிகளுக்கு திடீர் இடமாற்றம்

பயங்கரவாத விசாரணைப் பிரிவு (ரிஐடி) மற்றும் குற்றவியல் விசாரணைப் பிரிவு (சிஐடி) ஆகியவற்றின் பணிப்பாளர்கள் உள்பட 11 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த இடமாற்றத்துக்கு பொலிஸ் மற்றும் தேர்தல் ஆணைக்குழுக்கள் ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் அத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி 6 மூத்த பொலிஸ் அத்தியட்சகர்கள், 3 பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் 2 உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் இதில் அடங்குகின்றனர்.

இந்த நிலையில் குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தின் பணிப்பாளராக மூத்த பொலிஸ் அத்தியட்சகர் ஜே.அல்விஸ் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.