நாளை முதல் பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகள் அதிகரிப்பு

நாட்டில் நாளை முதல் அனைத்து பேக்கரி உற்பத்திகளுக்குமான விலைகள் அதிகரிக்கப்படவுள்ளன.

இந்த அறிவிப்பை பேக்கரி உற்பத்தி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் இன்று வெளியிட்டிருக்கின்றார்.

குறிப்பாக தேங்காய் எண்ணெய் மற்றும் இதர பொருட்களின் விலைகள் அதிகரிப்பே இதற்கு காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.