இலங்கையில் மேலும் 14 பேர் அடையாளம்! பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1162 ஆக உயர்வு

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 14 பேர் இன்று மாலை அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இதன்படி நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்து 162ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 695 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 458 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.