ஊரடங்கு வேளையில் பொலிஸாருடன் தர்க்கத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் பிரஜைகள்!

நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் மாத்தறை நகரில் காரில் வலம் வந்த மூன்று பாகிஸ்தானியர்களை விசாரணை செய்ய முயற்சித்த பொலிஸாருடன் அவர்கள் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று இன்று பதிவாகியது.

தாங்கள் மூவரும் தூதரக மட்ட நோக்கில் இலங்கைக்கு வந்தவர்கள் என அவர்கள் பொலிஸாருடன் குறுக்கீடு செய்து தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் அவசரத்தில் தாங்கள் வந்த காரினை செலுத்த முயற்சித்தபோது பொலிஸாரின் மோட்டார் சைக்கிளில் மோதியுள்ளனர்.

எனினும் இறுதியில் அவர்கள் சம்பந்தப்பட்ட நபர் ஒருவர் குறித்த இடத்திற்குவந்து அந்த மூன்று வெளிநாட்டுப் பிரஜைகளினுடைய ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தியதை அடுத்து அங்கிருந்து செல்ல அவர்களை பொலிஸார் அனுமதித்ததாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.