ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் இவற்றினை திறக்ககூடாது!

நாளையதினம் நாட்டில் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும், சில வகையான வர்த்தக ஸ்தாபனங்களை திறப்பது தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.

அதன்படி உடற்கட்டழகு நிலையங்கள், தியைரங்கங்கள், ஸ்பா என்பன மீளத்திறக்க அனுமதிக்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாளை ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் சிகையலங்கார நிலையங்கள், அழகு நிலையங்கள் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட சுகாதார நடைமுறையை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. .