ஆறுமுகன் தொண்டமானின் மகனுக்கு தொடரும் சோகத்திற்கு மேல் சோகம்!

மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மகன் ஜுவன் தொண்டமானுக்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாடு சிங்களே என்கிற அமைப்பினால் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அமரர் தொண்டமானின் பூதவுடலை வீதியில் வாகனத்தில் எடுத்துவரும்போது அவரது மகன் ஜீவன் தொண்டமானும் அவர் சார்பிலானவர்களும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியுள்ளதாக முறைப்பாட்டு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை தந்தையார் இறந்த சோகத்தில் இருக்கும் ஜீவன் மீது இவ்வாறு முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளமை அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.