ரம்பொடை ஆஞ்சநேயர் கோவிலில் நடப்பது என்ன? ஆர்வலர்கள் கடும் அதிருப்தி

ரம்பொடை ஆஞ்சநேயர் கோவிலின் தற்போதைய முகாமையாளரின் செயற்பாடுகள் தொடர்பில் சமூக ஆர்வலர்கள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

தன்னிச்சையான முறையில் ஆள்குறைப்பு செய்துள்ளார் என்றும், புனித பூமியாக கருதப்படும் ஆலய வளாகம் முறைகேடாக பயன்படுத்தப்படுவதாகவும் கோவில் முகாமையாளர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஆலய வளாகத்திலுள்ள மண்டபத்திலேயே பஜனை உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் இடம்பெற்றுவரும் நிலையில் , அந்த மண்டபத்தை ஆடைகளை காயவிடும் இடமாக அவர் பயன்படுத்துவதாகவும் பக்தர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

எனவே, இது தொடர்பில் பொறுப்பானவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் பல தரப்புகளில் இருந்தும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.