விரைவில் தனியார் பஸ் வேலைநிறுத்தம்?

விரவில் தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக கூறப்படுகின்றது.

அதன்படி எதிர்வரும் சில தினங்களில் கொழும்பு உட்பட மேல் மாகாணத்தில் இந்த தனியார் பஸ் வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படும் என்று அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

போக்குவரத்து அதிகார சபையினரால் விதிக்கப்படும் அனாவசிய கட்டணங்களை எதிர்த்து இந்த வேலைநிறுத்தம் நடத்தப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.