யாழ். பல்கலைக்கழக விடுதிகளுக்குள் நுழைந்த விசேட அதிரடிப்படை!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் விடுதிகள் தொற்று நீக்கும் பணியில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து இன்று ஈடுபட்டனர்.

நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழங்களை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகின்றது.

இந் நிலையிலேயே இந்தத் தொற்று நீக்கல் பணிகளில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்படி கோண்டாவிலில் உள்ள யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கான விடுதிகளிலேயே தொற்று நீக்கி மருந்துகள் விசிறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.