மட்டக்களப்புக்கு தமிழர் பிரதேசத்திற்கு இன்றையதினம் தேரர் ஒருவர் விஜயம் செய்திருந்தார்.
இதன்போது சாணக்கிய ராகுல ராசபுத்திர மகிந்தவுடன் வந்து தம்மை சந்தித்ததாக அவர் மக்கள் மத்தியில் பகிரங்கமாக தெரிவித்தார்.
அத்துடன் சாணக்கிய ராகுல புத்திர அடிக்கடி தம்மை சந்திப்பதாகவும் இன்றுவரை தங்கள் நட்பு தொடர்வதாகவும் தேரர் கூறினார்.
இதன்போது அவசரமாக இடைப்புகுந்த சாணக்கிய ராகுல புத்திர தேரரை வேறெதும் கூறவிடாமல் இடைப்புகுந்து தடுத்தார். இதனையடுத்து அங்கு சற்றுநேரம் குழப்பம் ஏற்பட்டிருந்தது,
இந்நிலையில் தங்களின் நட்பினை தேரர் பகிரங்கபடுத்தியதை சாணக்கிய ராகுல புத்திர மறைக்க முற்பட்டமை அப்பட்டமாக தெரிகின்றது.
இந்த நிலையில் இவ்வாறு சாணக்கிய ராக புத்திர நடந்து கொண்டமை ஆரோக்கியமான விடயமல்ல என சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
வெல்லாவெளி வேத்துச்சேனை கிராமத்தில் தொல்பொருள் பிரதேசமாக அடையாளப்படுத்துவதை எதிர்த்து பொதுமக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் இன்று காலை முதல் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட வேத்துச்சேனை கிராமத்தில் தொல்பொருள் பிரதேசமாக அடையாளப்படுத்துவதை எதிர்த்து பொதுமக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் இன்று ஞாயிற்றுகிழமை(5)காலை முதல் ஈடுபட்டனர்.