கொரோனா தொற்றுக்குள்ளான மாரவில பெண் பயணித்த பேருந்து இடங்கள் இதோ!

மாரவில பிரதேசத்தில் கொரோனா தொற்றிற்கு உள்ளான பெண் பயணித்த பேருந்து களின் விபரங்கள் வெளியாகியுள்ளன.

அந்தவகையில் குறித்த பெண் குருணாகலை, மீகமுவ, நாத்தாண்டிய ஆகிய பேரூந்து வழித்தடங்களில் பல பொதுப் போக்குவரத்து பேருந்துகளில் பயணித்திருந்தமை தெரியவந்துள்ளது.

இதன்படி பொலநறுவையிலிருந்து குருணாகலை வரையும் பயணித்திருந்த அப் பெண் அங்கிருந்து நீர்கொழும்பு பிரதேசத்திற்கும் பயணித்துள்ளார்.

அதன்பின்னர் அங்கிருந்து தங்கொட்டு வரை பயணித்து நாத்தாண்டிய பிரதேசத்திற்கும் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகின்றது.