புறக்கோட்டை கடைகளை மூடச்சொல்லி உத்தரவா? பொலிஸார் கூறியது!

கொழும்பு புறக்கோட்டை பிரதான வீதியிலுள்ள கடைகளை மூடுமாறு எந்த உத்தரவும் இல்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு மூடச்சொல்லப்பட்டதாக தொலைபேசியில் எவராவது போலிப் பிரசாரத்தை கொண்டால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

கொரோனா அச்சுறுத்தலினால் கொழும்பு புறக்கோட்டை பிரதான வீதியிலுள்ள கடைகளை மூடும்படி இன்று பகல வதந்தி பரவியது.

இதுகுறித்து கேட்டபோது, விளக்கம் தெரிவித்த பொலிஸார்,

இன்று காலை பேங்ஸ்சல் வீதியில் இருவர் சந்தேகத்திற்கு இடமாக பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் சில மணிநேரம் அந்த வீதி மட்டும் மூடப்பட்டு பின் திறக்கப்பட்டதாகவும், எனினும் ஒட்டுமொத்த வீதிகளையும் மூட உத்தரவிடவில்லை என்றும் கூறியுள்ளனர்.