யாழில் 7 நாட்களில் 11 பேர் மரணம்..! மக்களே அவதானம்

கடந்த ஒருவார காலத்தில் வீதி விபத்துக்களால் 11 பேர் உயிரிழந்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் கூறுகின்றன.

இதேபோல் கடந்த 01.06.2020 தொடக்கம் 30.01.2020 ஒரு மாதகாலப்பகுதியில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த உயிரிழப்புக்களில் அதிகளவான உயிரிழப்புக்கள் வீதி விபத்துக்களால் இடம்பெற்றுள்ளதாகவும் சுட்டிக்க்காட்டப்பட்டுள்ளது.

எனவே பொது மக்கள் அவதானத்துடன் பயணங்களை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.