எதிர்வரும் நாட்களில் அரசாங்க விடுமுறையில்லை! வெளியான தகவல்

எதிர்வரும் நாட்களுக்கு அரச விடுமுறையாக அறிவித்துள்ளதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை என அரச தகவல் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.

நாட்டில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் தீவிரம் அடைந்துள்ளதால், எதிர்வரும் நாட்களில் தொடர் விடுமுறை அறிவித்துள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்தநிலையில் அதனை தெளிவுபடுத்தும் நோக்கில் அரச தகவல் திணைக்களம் சற்று முன்னர் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த விசேட அறிகையிலேயே இந்த விடயம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.