கொரோனா சந்தேகம் - கண்டியில் பலர் தனிமைப்படுதலில்!

கண்டி – குண்டசாலை பிரதேசத்தில் 50க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா சந்தேகத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கந்தக்காடு புனர்வாழ்வு முகாமில் ஆலோசகராக உள்ளார்.

அவர் கடந்த ஜூன் 25ம் திகதி விடுமுறை பெற்று மீண்டும் ஜூலை 6ம் திகதி முகாம் திரும்பினார்.

இந்நிலையில் அவருக்கு PCR பரிசோதனை செய்யப்பட்டத்தில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதன் காரணமாக அவர் சார்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுதலில் உள்ளதாக மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அர்ஜுன திலகரத்ன கூறினார்.