மீண்டும் உக்கிரம் எடுக்கும் கொரோனா பரவல்; அநுராதபுர பகுதியில் சில பிரதேசங்கள் முடக்கம்

கோரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பதால், ராஜங்கணை யயா 01 – 03 மற்றும் 05 ஆகிய பிரதேசங்கள் முற்றாக முடக்கி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவ நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் பணியாற்றும் ஆலோசகர் ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட நிலையில் ராஜங்கணையில் மேலும் சிலருக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த நிலையிலேயே இந்த குறிப்பிட்ட பிரதேசங்களில் மக்கள் நடமாட்டத்துக்கு முற்றாகத் விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டில் கோரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் மேலும் 14 பேர் கோரோனா வைரஸ் தொற்றினால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 2631ஆக உயர்வடைந்துள்ளது.