07 வேட்பாளர்கள் அதிரடியாகக் கைது

தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 07 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த விஜேசூரிய தெரிவித்தார்.

புத்தளம், குருநாகல், யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த வேட்பாளர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, தேர்தல் சட்டங்களை மீறும் வகையில் பணியிலிருந்த 10 பொலிஸ் அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.