தெமட்டகொடை வீடொன்றிலிருந்து சிக்கிய பெருந்தொகை பணம்

தெமட்டகொடையிலுள்ள வீடொன்றிலிருந்து பெருந்தொகை பணம் கைப்பற்றப்பட்டுள்ளது

இதன்போது 3 கோடி இலங்கை ரூபா மற்றும் 140,000 அமெரிக்க டொலர்கள் (சுமார் 2.59 கோடி இலங்கை ரூபா) பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு மீட்க்கப்பட்ட பணம் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையது என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மேலும் இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.