இலங்கைக்கு வந்த கொரோனா எச்சரிக்கை!

இலங்கையில் இன்னும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் குறையவில்லை என எச்சரிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க இதனை இன்று ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கூறினார்.

இதேவேளை பொலன்னறுவை லங்காபுர பகுதிகளில் 300 பேருக்கு நேற்று இரவு பி.சி.ஆர். பரிசோதனை நடத்தப்பட்டுள்ள நிலையில் அதில் ஒருவருக்கு தொற்று உறுதியாகியிருப்பதாகவும் டாக்டர் அனில் ஜாசிங்க மேலும் தெரிவித்தார்.