இன்றுமுதல் நாடு முழுதும் அதிரடி பரிசோதனை!

இன்று முதல் நாடு முழுவதிலும் பி.சி.ஆர். பரிசோதனைகள் நடத்தப்படவுள்ளன.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க இந்த தகவலை வெளியிட்டார்.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இருக்கின்றது என அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் முதலில் இந்த பரிசோதனை ஆரம்பிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

இதுதவிர, இன்று முதல் அனைத்து மாவட்டங்களிலும் பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.