விமல்,கம்மன்பிலவை துரத்தியடித்த ஊழியர்கள்

அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில ஆகியோர் கொழும்புத் துறைமுகத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுவரும் ஊழியர்களை சந்திக்கச் சென்றபோது கடுமையான கூச்சல் மற்றும் எதிர்ப்பு ஏற்பட்டதால் அங்கிருந்து வெளியேறிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பு துறைமுகத்தின் ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்ந்தும் இன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இப்போராட்டம் துறைமுகத்தின் கிழக்கு முனையை இந்தியாவிற்கு வழங்குவதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை எதிர்த்து நடத்தப்படுகின்றது.

இந்த நிலையில் நேற்று இரவு குறித்த அரச பிரதிநிதிகள் அவ்விடத்திற்கு சென்று சமரசப் பேச்சு நடத்த முயற்சித்துள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த துறைமுக ஊழியர்கள் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.

இதனையடுத்து நிலைமையை புரிந்துகொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் அங்கிருந்து நழுவிச் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.