விடத்தல்பளையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த தாயொருவர் குழந்தை பிரசவித்துள்ளார்

விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்குள்ளான கர்ப்பவதியான தாயார் ஒருவர் நேற்றையதினம் குழந்தை பிரசவித்துள்ளார்.

இந்நிலையில் அக் குழந்தை சுகதேகியாக இருப்பதாக, யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் தெரிவித்தனர்.

திருகோணமலை கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த பெண் சவுதி அரேபியாவில் இருந்து திரும்பிய நிலையில் விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.

கோவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக, சவுதி அரேபியாவில் இருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்டு, யாழ்ப்பாணம் விடத்தல்பளை கொரோனா தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த வேளையில், நேற்று முன்தினம் குழந்தைப் பேற்றுக்காக, இராணுவத்தினரால், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மகப்பேற்றின் பின்னர், குழந்தையும் தாயும் நலமாக இருப்பதாகவும், வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், சிகிச்சை விடுதியில் தனியான விடுதியில் இந்த தாயுக்கும் சேய்க்குமான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிகிச்சையின் பின்னர், மருத்துவ சான்றிதழ்கள் வழங்கப்பட்டு, இன்று யாழ்.போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் இருந்து, திருகோணமலைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளானர்.

இதற்கான ஏற்பாடுகளை, வைத்தியசாலை மற்றும் யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி ரூவான் வணிகசூரியவின் பணிப்புரைக்கு அமைவாக, விடத்தல்பளை படைத்தலைமையகத்தின் ஊடாக முட்டெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.