மிகச் சிறப்பாக இடம்பெற்ற வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய மஞ்சத்திருவிழா

ஈழத்தின் வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவ பெருந் திருவிழா சிறப்பாக இடம்பெற்றுவருகின்றது.

அந்தவகையில் 10ஆம் நாளான இன்றைய தினம் மஞ்சத் திருவிழா நடைபெற்றது.

இதன்போது சுவாமி மஞ்சத்தில் வீதியுலா வரும் காட்சியை காண பல பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.

நாட்டில் நிலவும் கொரோனா அச்சத்தினால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளபோதும் நல்லைக் கந்தனின் அருட்காட்சியினை காண்பதற்கு பக்தர்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மஞ்சத் திருவிழாவில் கலந்து கொண்டிருந்தனர்.