யாழ்.மாவட்ட இராணுவ தளபதி அதிரடியாக இடமாற்றம்..!

யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ருவாண் வணிகசூரிய அதிரடியாக இடமாற்றப்பட்டுள்ளார்.

இதன்படி இந்த இடம்மாற்ற உத்தர்வானது எதிர்வரும் ஆகஸ்ட் 8ம் திகதி நடைமுறைக்குவரவுள்ளது.

இவ்வாறு இடமாற்றமாகி செல்லும் மாவட்ட இராணுவத்தளதி தொண்டர் படையணியின் தளபதியாக நியமிக்கப்படவுள்ளார்.

மேலும் யாழ்.மாவட்ட புதிய இராணுவ தளபதியாக தற்போது கிழக்கு மாகாணத்தில் பணியாற்றும் தளபதி செனரத் பண்டார நியமிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னரும், தேர்தல் நிறைவடைந்த பின்னர் 2 வாரங்களுக்குள் எந்தவொரு இடமாற்றத்திற்கும் தேர்தல் ஆணைக்குழு அனுமதி பெறப்படவேண்டும்.

அதற்கிணங்க ஆணைக்குழு அனுமதி பெற்றுக்கொண்டதன் அடிப்படையிலேயே இந்த இடமாற்றம் வழங்கப்பட்டிருப்பதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.