இன்று இடம்பெற்ற களேபரத்தில் மாவையின் மகன் வைத்தியசாலையில் அனுமதி

யாழ் மத்திய கல்லூரியில் இன்று அதிகாலை நடந்த வாக்கு எண்ணும் பணியில் பல குளறுபடிகள் நடந்திருந்தன.

வெற்றிபெற்ற சசிகலா நடராஜனை, தோல்வியடைந்ததாக அறிவித்தார்கள். இப்படி நடக்க இருக்கிறது என்பதனை முதலிலேயே அறிந்த, மாவை சேனாதிராசாவின் மகன், ஜனநாய வழியில் செயல்படுங்கள் என்று கூச்சலிட்டார்.

இதனையடுத்து சுமார் 15 அதிரடிப்படையோடு வந்திறங்கிய சுமந்திரன், சசிகலாவை அச்சுறுத்தி வீட்டுக்கு அனுப்பிய பின்னர் அங்கே சுமந்திரனுக்கு எதிராக கோஷமிட்ட நபர்கள் மீது அதிரடிப்படையினர் தாக்குதல் நடத்தினார்கள்.

இந்த தாக்குதலில் மாவை சேனாதிராசாவின் மகனும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இது தொடர்பில் மாவை சேனாதிராசா அவர் சம்பந்தனிடம் முறைப்பாடு செய்துள்ளதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.