உழவு இயந்திரம் புரண்டு விழுந்ததில் குடும்பஸ்தர் பரிதாப மரணம்

கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட , வேப்பவெட்டுவான், பண்டாரக்கட்டு வயல் பகுதியில் உழவு இயந்திரம் புரண்டு விழுந்ததில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார்.

சம்பவம்த்து வேப்பவெட்டுவானை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான உதயராசா மயூரன் (27) என்பவரே மரணமடைந்தவராவார்.

தனது தந்தையின் வயலை உழுதுவதற்காக நேற்று மாலை வீட்டிலிருந்து உளவு இயந்திரம் செலுத்தி, பண்டாரக்கட்டு வயலை அண்மிக்கும் போது , வரம்பு பகுதியில் உழவு இயந்திரம் ஏறும் போது தடம்புரண்டுள்ளது.

இதன்போது தலைப்பகுதி பாதிப்புற்று அதிக குருதி வெளியேறிய நிலையில் செங்கலடி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.