இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு புதிய தலைமைப் பயிற்சியாளர் நியமனம்!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளர் லங்கா டிசில்வா இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மோசமான செயல்திறன் காரணமாக தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து ஹர்ஷா டி சில்வா நீக்கப்பட்டுள்ளார்.

இந் நிலையில் லங்கா டிசில்வா இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணிக்காக மூன்று டெஸ்ட் மற்றும் 11 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள லங்கா டிசில்வா, 2020 ஆம் ஆண்டின் இறுதிவரை இந்த பதவியில் இருப்பார் எனவும் கூறப்படுகின்றது.