வெலிகம பகுதியில் கோர விபத்து! ரயிலுடன் மோதி தூக்கிவீசப்பட்ட கார்

வெலிகம பகுதியில் விபத்து ரயிலுடன் கார் மோதியதில் கார் தூக்கி வீசப்பட்டதில் சம்பவ இடத்திலேயே சாரதி பலியுள்ளார்.

இச்சம்பவம் மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றது.

பெலியத்தையில் இருந்து மருதானை நோக்கி சென்றுகொண்டிருந்த ரயில் மீது வெலிகம பகுதியில் உள்ள ரயில் கடவையை கடக்க முற்பட்ட காரினை மோதியுள்ளது.

கார் தூக்கி வீசிப்பட்ட நிலையில் அதனை ஓட்டிச் சென்ற சாரதி உயிரிழந்துள்ளார்.

சமிக்ஞை விளக்கு எச்சரிக்கை செய்தபோதும் அவசரமாக கடவையினை கடந்தனால் இவ் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.