கொ​ழும்பு மேயர் ரோஸி சேனாநாயக்கவின் கணவர் காலமானார்

கொ​ழும்பு மாநகர சபையின் மேயர் ரோஸி சேனாநாயக்கவின் கணவன் அத்துல சேனாநாயக்க தனது 64 ஆவது வயதில் காலமானார்.

அவர், கொழும்பு மாவட்டத்தின் ​ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் கனிஷ்க சேனாநாயக்கவின் தந்தையாவார்.

அத்துல சேனாநாயக்க, முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஸ்டேன்லி சேனாநாயக்கவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.