பேஸ்புக் களியாட்டம் ; 5 பெண்கள் உட்பட 20 பேர் கைது!

பாணந்துறை மிலானியா பகுதியில், பேஸ்புக் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட களியாட்ட நிகழ்வொன்றில் 20 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 5 பெண்களும் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட இக் களியாட்ட நிகழ்வில் ஹெரோயின், கேரள கஞ்சா மற்றும் போதைப்பொருள் மாத்திரைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.