சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மஞ்சள், ஏலம் பறிமுதல்

சட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட மஞ்சள் மற்றும் ஏலம் ஆகியன இராணுவத்தின் புலனாய்வு பிரிவினரால் கற்பிட்டி பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் படகின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நாட்டில் விற்பனை செய்யும் நோக்கில் குறித்த மஞ்சள் மற்றும் ஏலம் ஆகியன கொண்டு வரப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.