யாழ்.நீர்வேலியில் துணிகரம்..! வெள்ளை வானில் வந்தவர்களால் கடத்தப்பட 20வயது யுவதி

யாழ்ப்பாணம் நீர்வேலியில் வெள்ளை வாகனத்தில் வந்த கும்பல் வீட்டிலிருந்தவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்திவிட்டு 20 வயதான யுவதியை கடத்தி சென்றதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

நீர்வேலி வடக்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்கு வெள்ளை வாகனத்தில் சென்ற நான்கு பேர் கொண்ட குழுவினர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்தவர்களை தாக்கியுள்ளனர்.

அத்துடன் வீட்டில் இருந்த 20 வயது யுவதியை பலாத்காரமாக கடத்திச் சென்றுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.