சாய்ந்தமருது கடற்கரைப்பகுதியில் கரையொதுங்கிய டொல்பின் மீன்

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது கடற்கரைப்பகுதியில் டொல்பின் மீன் ஒன்று இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.

இன்று காலை கடற்கரையோர பகுதியில் மிதந்து வந்த குறித்த மீன் இறந்த நிலையில் கரையை அடைந்துள்ளது.

இதனையடுத்து உரிய அதிகாரிகள் அப் பகுதிக்கு வந்து குறித்த மீனை பார்வையிட்டதுடன் ஆய்வுகளையும் மேற்கொண்டனர்.

இதேவேளை அண்மைக்காலமாக அம்பாறை மாவட்ட கரையோரங்களில் அரிதான மீன் இனங்கள் உயிருடனும் இறந்த நிலையிலும் கடற்கரையில் வந்து ஒதுங்குகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.