யாழில் தங்குமிட விடுதி முற்றுகை ; தென்னிலங்கை யுவதிகள் உட்பட 4 பேர் கைது

யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய முன்வீதியில் அமைந்துள்ள தங்குமிட விடுதி ஒன்றில் விபசாரத்தில் ஈடுபட்டனர் என்ற சந்தேகத்தில் இரண்டு தென்னிலங்கை பெண்கள் மற்றும் இரு இளைஞர்கள் யாழ்ப்பாணம் பொலிசாரால் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

நல்லூர் ஆலய முன்வீதியில் அமைந்துள்ள தங்குமிட விடுதியில் விபச்சார நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக யாழ்ப்பாணம் பொலிசாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில் யாழ்ப்பாண தலைமை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் குறித்த விடுதியை முற்றுகையிட்டுள்ளனர்.

இதன்போது விடுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் தங்கியிருந்த இரண்டு தென்னிலங்கை பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இரண்டு இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான செய்யப்பட்ட பெண்கள் 20-25 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் கொழும்பு மற்றும் புத்தளம் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் பொலிசார் தெரிவித்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.