இலங்கையில் உள்ள இவ்வாலயம் பற்றி கேள்விப்பட்டிருக்கின்றீர்களா? இந்தியாவில் கூட இல்லை

உலகின் ஒரே சீதாதேவிக்கான கோவில் இலங்கையில் மட்டுமே உள்ளது.

இது சீதா அம்மான் கோவில் என்றழைக்கப்படுகிறது. நுவரெலியா பதுளை வீதியிலிருந்து 7 கி.மீ தூரத்தில் சீதா எலிய இடத்தில் இக்கோவில் உள்ளது.

உலகில் உள்ள ஒரே "சீதா கோவில்" இதுதான், சீதாபிராட்டிக்கும் இந்தியாவில் கூட கோவில் இல்லை.

இலங்கையின் மத்திய பிரதேச நுவரெலியா மாவட்டத்தில் ஏற்கனவே சீதை அம்மன் கோயில் அமைந்துள்ளது.

நுவரெலியா மலைப்பகுதியில் அசோகவனம் அமைந்திருக்கிறது. அந்த வனம் முழுக்க அசோக மரம் நிறைந்து காணப்படுகிறது.

இங்குதான் ராவணனால் புஷ்பக விமானம் மூலம் தூக்கி வரப்பட்ட சீதா தேவி சிறை வைக்கப்பட்டதாக புராணங்கள் கூறுகின்றன.

அசோக வனத்தில், அசோக மரத்தின் அடியில் சீதா தேவி தங்கியிருந்ததாகச் சொல்லப்படும் இடத்தில் சீதை தேவிக்கென்றே பிரத்தியேகமாகக் கோயில் கட்டியிருக்கிறார்கள்.

இந்த கோவிலுக்கு இலங்கையிலிருந்து மட்டுமல்லாமல் வெளிநாட்டவரும் சீதை அம்மனை வணங்கி செல்கிறார்கள்.