ஹப்புத்தளையில் தோட்டத் தொழிலாளர்கள் 10 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

பதுளை, ஹப்புத்தளை பகுதியில் தோட்டத் தொழிலாளர்கள் 10 பேர் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

ஹப்புத்தளை பெருந்தோட்டப் பிரிவில், இன்று மதியம் தேயிலை பறித்துக் கொண்டிருந்த 10 பெண்களே இவ்வாறு குளவிக் கொட்டுக்க இலக்காகியுள்ளனர்.

இந்நிலையில் , அவர்கள ஹப்புத்தளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, ஹப்புத்தளைப் பகுதியின் பங்கட்டி பெருந்தோட்டப் பகுதியில், ஆண் ஒருவரும் குளவிக் கொட்டுக்கு இலக்காகி, ஹப்புத்தளை மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகின்றது.