முல்லைத்தீவில் கணவனின் தொல்லை தாங்காத மனைவி செய்த விபரீத செயல்! கணவர் வைத்தியசாலையில் அனுமதி

முல்லைத்தீவு முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட கேப்பாபிலவு மாதிரி கிராமத்தில் கணவனின் தொல்லை தாங்கமுடியாத மனைவி கணவன் மீது பெற்றோல் ஊற்றி தீவைத்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் 45 அகவையுடைய கணவன் எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கணவன் மனைவிக்கு இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டு கணவன் வெளியிடத்தில் வாழ்ந்து வந்துள்ளார்.

இந் நிலையில் நேற்றையதினம் தனது பிள்ளைகளை பார்க்க வீட்டிற்கு சென்ற கணவனால் ஏற்பட்ட குடும்ப பிரச்சனையின் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலீசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.