பிளீஸ் போலி செய்திகளை பரப்பாதீர்கள்: இலங்கையை சேர்ந்த இளம்ஜோடியின் வேண்டுகோள்!

இலங்கையின் மிக இளமையான புத்திக-நெத்மி ஜோடியின் திருமண புகைப்படங்களை, புகைப்பட கலைஞர் தீக்ஷன பகிர்ந்திருந்தார்.

இந்த புகைப்படங்களை நேற்று அவர் பதிவேற்றியதிலிருந்து இன்றுவரை சுமார் 6,500 பேர் பகிர்ந்திருக்கிறார்கள்.

அதாவது ஆரம்பத்தில் சிறார்கள் இருவர் திருமணம் செய்தார்கள் என நெட்டிசன்கள் கேலியாக இந்த புகைப்படங்களை பகிர்ந்தார்கள்.

அதன் பின்னர், திடீரென நெட்டிசன்கள் ரூட் மாறி, அவர்கள் ஒரு மாதம் முன்னரே பிறந்தவர்கள், மாப்பிள்ளையின் வயது 28, மணப்பெண்ணின் வயது 27 என ஒரு கதையை அவிழ்த்து விட்டதில் அதை உண்மையென நம்பி, பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் மணமகன் புத்திக மகேஸ் கீர்த்திரட்ண நெட்டிசன்களிடம் ஒரு கோரிக்கை விடுத்துள்ளார்.

அதாவது தான் ஒரு மாதம் முன்னர் பிறக்கவில்லை என்றும், இது போன்ற போலிக்கதைகளை பரப்பாதீர்கள் எனவும் அவர் கோரியுள்ளார்.

அத்துடன் அதற்கு முன்னர் எனது மனைவியுடன் இணைத்து இப்படியான போலிக்கதைகளை பரப்பாதீர்கள் எனவும் தாம் உரிய வயதில் சட்டப்படி திருமணம் செய்துள்ளதாகவும் , தனது வயது 22 எனவும் அவர் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.