யாழ் சண்டிலிப்பாயில் இன்று அதிகாலை இடம்பெற்ற சம்பவம்! தந்தை, மகன் வைத்தியசாலையில் அனுமதி

யாழ்.சண்டிலிப்பாய் பகுதியில் இன்று அதிகாலை வீடொன்றுக்குள் வாள்களுடன் புகுந்த கும்பல் ஒன்று தந்தை மற்றும் மகன் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்த தந்தையும், மகனும் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் முற்பகை காரணமாக இடம்பெற்றதா? அல்லது திருட்டு முயற்சியா? வாள்வெட்டு வன்முறையா? என பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.