அக்கரைப்பற்று மண்ணிற்கு பெருமை சேர்த்த தணிகாசலம் தர்சிகா

கொழும்பு பல்கலைக்கழகத்தில் வைத்தியத்துறையில் கல்வி பயின்றுவந்த அக்கரைப்பற்று 7ஜ சேர்ந்த தணிகாசலம் தர்சிகா இறுதிப்பரீட்சையில் முதல் தரத்தில் சித்தியடைந்து தேசிய நிலையில் 3ஆம் நிலையினை பெற்று அக்கரைப்பற்று மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

ஓய்வு பெற்ற அதிபர் தணிகாசலம் மற்றும் குமுதா ஆகியோரின் மூத்த புதல்வியான இவர் தனது ஆரம்ப கல்வியை அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலையில் பயின்றவர்.

அத்துடன் 2012ஆம் நடைபெற்ற உயர்தர பரீட்சையில் உயிரியில் துறையில் 3 ஏ சித்தியினை பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடத்தையும் தேசிய மட்டத்தில் 4ஆம் நிலையினையும் பெற்றுக்கொண்டவர்.

இந்நிலையில் அண்மையில் வெளியான வைத்தியத்துறை இறுதிப்பரீட்சை பெறுபேறுகளின்படி முதல் தரத்தில் சித்தியடைந்து தேசிய நிலையில் 3ஆம் நிலையினை பெற்று தான் பிறந்த மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளார்.