தென்னிலங்கையில் தமிழ் மாணவி ஒருவருக்கு நேர்ந்த கதி !

இரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொட – பின்னவத்த பிரதேசத்தில் தமிழ் மாணவி ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

பலாங்கொட வைத்தியசாலையில் சுமார் ஐந்து மணி நேரம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலேயே இவ்விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன் சம்பவம் இடம்பெற்றபோது குறித்த மாணவி தனிமையில் இருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.