இலங்கையின் பிரபல நடிகர் காலமானார்

இலங்கையின் சிங்களத் திரையுலகின் பிரபல்யமான நடிகர் டைசன் குரே தனது 68 ஆவது வயதில் காலமானார்.

கடந்த வாரத்திலிருந்து சுகயீனமடைந்த இவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தார்.

இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி அவர் இன்று பகல் காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

டெனிசன் குரேயின் மறைவு ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.