கழிவறைக் குழியில் வீழ்ந்த சிறுமி பரிதாப உயிரிழப்பு

மாவனெல்லை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவெல, ஹிங்குல பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர், கழிவறைக் குழியில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக மாவனெல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறுமி நேற்றுக்காலை வீட்டு வாசலை சுத்தம் செய்து கொண்டிருந்த வேளையில், கழிப்பறை குழியின் மேல் இடப்பட்டிருந்த கொங்கிறீட் தட்டு உடைந்து அவர் குழிக்குள் விழுந்துள்ளார்.

அதன் பின்னர் சிறுமியை மீட்டு மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதித்த வேளையில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் 14 வயதான சிறுமி ஒருவரே உயிரிழந்தவராவார்.

கழிவறைக் குழியில் விஷவாயுவை சுவாசித்ததில் மரணம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலையில் பிரேத பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளதாக கூறிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.